ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!
எளிய ஸ்லோகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எளிய ஸ்லோகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


போற்றித் திருஅகவல்




நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் 50

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் தங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத் 60

தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210

படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி 225



திருச்சிற்றம்பலம்


நவக்கிரகங்களின் துதிப்பாடல்
காயத்ரீ: மந்திரங்கள்




சூரியன் மந்திரம் :
ஜபா குஸீம சங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்
சூரியன் துதிப்பாடல்
சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம்புகழும்,ஞாயிறேபோற்றி,
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி வீரியாபோற்றி.வினைகள்களைவாய்.
சூரிய பகவான் காயத்ரீ:
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராயதீமஹி|
தந்நோஆதித்ய:`ப்ரசோதயாத்||




சந்திரன் மந்திரம் :
ததிசங்க துஷாராபம் ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்
சந்திரன் துதிப்பாடல்:
எங்கள் குறைகள் எல்லாம்தீர்க்கும் திங்களே போற்றி,திருவருள்தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி .
சந்திர பகவான் காயத்ரீ:
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாயதீமஹி|
தந்நோஸோம:ப்ரசோதயாத்||




செவ்வாய் மந்திரம் :
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம்
அங்காரகன் துதிப்பாடல்
சிறப்புறு மணியே செவ்வாய்தேவே குறையிலாதருள்வாய்குணமுடன்வாழ
மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.
செவ்வாய் காயத்ரீ:
வீர த்வாஜய வித்மஹே விக்த ஹஸ்தாய தீமஹி|
தந்தோ பெளம: ப்ரசோதயாத்||




புதன் மந்திரம் :
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம்புதம் பிரணமர்மயஹம்
புதன் துதிப்பாடல்:
இதமுற வாழ இன்னல்கள்நீக்கும் புத பகவானே பொன்னடிபோற்றி.
பந்தந் தாள்வாய்பண்ணொலியானே உதவியே யருளும் உத்தமாபோற்றி.
புத பகவான் காயத்ரீ:
ஓம் கஜத்வஜாயவித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||




குரு மந்திரம் :
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
குரு துதிப்பாடல்:
குணமிகு வியாழக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா க்ரகதோஷ மின்றிக் கடாஷித் தருள்வாய்
குரு பகவான் காயத்ரீ:
ஓம் ஆங்கீரஸாய வித்மஹே சராசார்பாய் தீமஹி!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!




சுக்கிரன் மந்திரம் :
ஹிமகுந்த ம்ருணாளாபம் தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்கவம் ப்ரணமாம்யஹம்
சுக்கிர துதிப்பாடல்:
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே அள்ளி கொடுப்பாய் அடியார்க்கருளே
சுக்கிர பகவான் காயத்ரீ:
ஓம் ராஜதாபாய வித்மஹே ப்ருகு கதாய தீமஹி!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!




சனி மந்திரம் :
நீலாஞ்ஜந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நவாமி சநைச்சரம்
சனி துதிப்பாடல்:
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா
சனி பகவான் காயத்ரீ:
ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராயா தீமஹி!
தந்நோமந்த் ப்ரசோதயாத்!!




இராகு மந்திரம் :
அர்த்காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்
ராகு துதிப்பாடல்:
அரவெனும் இராகு அய்யனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி இராகுக்கனியே இரம்மியா போற்றி
ராகு பகவான் காயத்ரீ:
ஓம் ஸூக தந்தாய வித்மஹே உக்ரரூபாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!




கேது மந்திரம் :
பலாச புஷ்ப ஸ்ங்காஸம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்!
கேது துதிப்பாடல்:
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி
கேது பகவான் காயத்ரீ:
ஓம் சித்ர வர்ணாய வித்மஹே ஸர்பரூபாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!





எளிய ஸ்லோகங்கள்!!!!







மஹாலக்ஷ்மி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா.

ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா.

மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூர்ணம்.









16 லட்சுமிகளை வழிபட சுலோகங்கள் வழிபாடு செய்யுங்கள் வளம் பெறுங்கள்
1.மஹாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹாலட்சுமி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
2 . தனலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
3 .தான்யலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
4.வித்யாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம

5.ஸந்தானலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
6.வீரலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
7.ஸெளபாக்யலட்சுமி

யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
8.விஜயலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
9.சக்திலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
10.காருண்யலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
11, கீர்த்திலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
12, சாயாலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
13, சாந்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
14, கஜலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
கஜ ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:
15, ஆரோக்கியலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

16, அஷ்டலட்சுமி

யாதேவீ ஸர்வ பூதேஷு
அஷ்டலட்சுமிரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

அபிராமி அந்தாதி


அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி



ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம்எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! அங்ககையில் பாசாங்குசமும் கரும்புவில்லும்,
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.-1

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!-2

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!-3

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!-4

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே-5

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகமப் பத்ததியே!-6

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே-7

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே-8

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன்நிற்கவே-9

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே-10

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே-11

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே-12

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே-13

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே-14

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே-15

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே-16

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே-17

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.-18

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே-19

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே-20

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே-21

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.-22

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே-23

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே-24

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே-25

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே-26

உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே-27

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே-28

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முக்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே-29

அன்றேதடுத்து என்னையாண்டு கொண்டாய் கொண்டதல்ல-
என்கை நன்றே உனக்கு இனிநான் என்செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே -30

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே-31

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே-32

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே-33

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே-34

திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே-35

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வருந் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்றன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே-36

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்ப்பவளே-37

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே-38

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே-39

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்துஇறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே-40

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே-41

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம்கொண்ட நாயகி நல்அரவின்
படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே-42

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே-43

தவளே இவள்எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனி ஒருதெய்வம் உண்டாகமெய்த் தொண்டுசெய்தே-44

தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது துணிந்துஇச்சையே
பண்டுசெய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கை அன்றே-45

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே-46

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே-47

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக்குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே-48

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே-49

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையவள் சரணம் அரண் நமக்கே-50

அரணம் பொருள்என்று அருள் ஒன்றும் இலாத அசுரர்தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே-51

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே-52

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே-53

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே-54

மின் ஆயிரம்ஒரு மெய்வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே-55

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன்நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாஇப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும் என் ஐயனுமே-56

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே-57

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல்நல்லாள் தகை சேர்நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே-58

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயிலநினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார்பெற்ற பாலரையே-59

பாலினும் சொல்இனியாய் பனிமாமலர்ப் பாதம்வைக்க
மாலினும் தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார்ச்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன்முடை நாய்த் தலையே-60

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே-61

தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரிஉரி போர்த்தசெஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே-62

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே-63

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே-64

ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீசெய்த வல்லபமே-65

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின்மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே-66

தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே-67

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே-68

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம்இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே-69

கண்களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே-70

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே-71

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண் இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே-72

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே-73

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே-74

தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே-75

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின்குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே-76

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே-77

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே-78

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே-79

கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே-80

அணங்கே அணங்குகள் உன் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றும் இலேன் என்கண் நீவைத்த பேர் அளியே-81

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்த கரணங்கள் விம்மி கரைபுரண்டு
வெளியாய் விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே-82

விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர்எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே-83

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள்பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே-84

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும் முலையும் முலைமேல் முத்து மாலையுமே-85

மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல்விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே-86

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே-87

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே-88

சிறக்கும் கமலத்திருவே நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே-89

வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே-90

மெல்லிய நுண் இடை மின்அனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்அனை யாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்து எழ வெண்பகடு ஊரும் பதம் தருமே-91

பதத்தே உருகிநின் பாதத்திலே மனம் பற்றி உன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே-92

நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே-93

விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே-94

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம்எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே-95

கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில்வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் அதிபரே-96

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே-97

தை வந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல்அறியா மடப்பூங்குயிலே-98

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே-99

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே-100







முருகன்



முருகனை தொழுவோம் வினைகளை களைவோம் முருகன் இருக்க பயன் ஏன்?



ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!




மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவஎஉம் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி! – அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி|
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத்||





கணபதி



தும்பிக்கையானை தொழுவோம் நம்பிக்கையாய் அருள் பெருவோம்




சுக்லாம் பரதரம் விஷ்ணும்!
சசிவர்ணம் சதுர்ப் புஜம்!
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்!
ஸர்வ விக்னோப சாந்தயே!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்!
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு!
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்!
தப்பாமல் சார்வார் தமக்கு!



பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம் கை!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே!


ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர
சதநாமாவளி
(பூ , அருகம்புல், வில்வம், அர்ச்சனை செய்க)


ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கெளரீபுத்ராய நம:
ஓம் கணேஷ்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ராஜாய நம:

ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம:

ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:

ஓம் ஸர்வதனயாய நம:
ஓம் ஸர்வரீப்ரியாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம:

ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் ஷிவாய நம:
ஓம் ஷுத்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் ஷாந்தாய நம:

ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துத்யாய நம:
ஓம் பக்தவிக்ன வினாஷனாய நம:

ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் ஷக்திஸம்யுதாய நம:
ஓம் ஸம்போதராய நம:

ஓம் ஷூர்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம:

ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்னி லோசனாய நம:
ஓம் பாஷாங்குஷதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:

ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம:
ஓம் பீஜாபூரபலாஸக்தாய நம:

ஓம் வரதாய நம:
ஓம் ஷாஷ்வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜயப்ரியாய நம:
ஓம் வீதபயாய் நம:

ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷுசாபத்தே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:

ஓம் உத்பலகராய நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரிபேத்ரே நம:
ஓம் ஜடிலாய நம:

ஓம் கலிகல்மஷநாஷநாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:

ஓம் ஆஷ்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் ஸெளம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் ஷாந்தாய நம:

ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானினே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:

ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்ததைத்யபயதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேஷ்வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:

ஓம் விதயே நம:
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:

ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் தீராய நம:
ஓம் வாகீஷாய நம:

ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வ-ப்ரியாய நம:
ஓம் அவ்யக்த-மூர்த்தயே நம:
ஓம் அத்புத-மூர்த்திமதே நம:
ஓம் ஷைலேந்த்ர தநுஜோத்ஸங்க

கேலநோத்ஸுக-மானஸாய நம:

ஓம் ஸ்வ-லாவண்ய-ஸுதா

ஸார-ஜித-மன்மத-விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிக-வாஹனாய நம:
ஓம் ஹருஷ்டாய நம:

ஓம் துஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:

நாநாவிதபரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி



வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!