கிரஹணங்கள்
பார்சுவ சந்திர கிரஹணம் விரோதி வருடம் மார்கழி திங்கள் 16-ம் நாள் (31/12/09-01/01/2010)
புஷ்யசுக்ல பூர்ணிமா(பெளர்ணமி) வியாழக்கிழமை பார்சுவ சந்திர கிரஹணம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் கேது கிரஸ்தம் தூம்ர வர்ணம்.
ஆரம்பம் இரவு 12.21,மத்தியகாலம் இரவு12.52,முடிவு காலம் 01.23
”வட மேற்க்கில் பிடித்து கிழக்கு திக்கில்: பெளர்ணமியிலேயே பிடித்து பிரதமையில் விடுகிறது”
தோஷக்கிழமை & நக்ஷத்திரங்கள்:
கிரகணத்தை ஒட்டி, வியாழன், வெள்ளி கிழமைகளில் பிறந்தவர்களும், மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் அவரவர் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு சாந்தி பரிகார பூஜை செய்து கொள்ள வேண்டும்.
பவுர்ணமி சிரார்த் தம் செய்பவர்கள் வெள்ளியன்று செய்ய வேண்டும். விடியற்காலை சந்திரனை தரிசிக்க வேண்டும். சிவாலயங்களில் உள்ள சந்திர பகவானுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.
அன்றையதினம் மாலை 06.00 மணிக்குள் போஜனம் செய்யவேண்டும்.
பூர்ண சூரிய கிரஹணம் தை மாதம் 2ஆம் தேதி 15-1-2010 வெள்ளிக்கிழமை அமாவாசை உத்திராடம் நட்சரத்தில் பிறக்கிறது. ஆரம்பம் 11-24 AM 3-14PM. உத்திராடம், கிருத்திகை, உத்திரம், பூராடம், திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்