ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!




நந்தீஸ்வரர் துதி


நந்தீஸ்வரரை தொழுவோம் சிவன் அருள் பெருவோம்




நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!

கந்தனின் தந்தையை தான் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாய் அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

ஒன்பது கோள்களுக்கம் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளம் கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்கவைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவைச் சூடிடும் நந்தி தேவா!
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி குஞ்சர முகத்தான்
தந்தை குந்திடும் ரிஷபநந்தி தஞ்சடனாய்
உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.



சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோச காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாதருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி

கெட்ட கனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி

வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்துஅருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிசேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி




நந்திதேவர் துதி!!
வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!