
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவஎஉம் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி! – அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி|
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத்||