கோமாதா நம் குலமாதா!
நம் இந்து மதத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகவும்,பாக்கியமாகவும் கருதுகின்றோம். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் போற்றுதலுக்குரியவர்களும் இருப்பதை தெரிந்து கொள்வோம்.
• பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
• கொம்புகளின் நுனியில் – காவேரி- கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
• சிரசில் - சிவபெருமான்
• நெற்றி நடுவில் - சிவசக்தி
• மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
• மூக்கினுள் - வித்தியாதரர்
• இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
• இரு கண்கள் - சந்திரர், சூரியர்
• பற்கள் - வாயு தேவர்
• ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
• ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
• மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
• உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
• கழுத்தில் - இந்திரன்
• முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
• மார்பில் - சாத்திய தேவர்கள்
• நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
• முழந்தாள்களில் - மருத்துவர்
• குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
• குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
• குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
• முதுகில் - உருத்திரர்
• சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
• அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
• யோனியில் - ஏழு மாதர்கள்
• குதத்தில் - இலக்குமி தேவி
• வாயில் - சர்ப்பரசர்கள்
• வாலின் முடியில் - ஆத்திகன்
• மூத்திரத்தில் - ஆகாய கங்கை
• சாணத்தில் - யமுனை நதி
• ரோமங்களில் - மகாமுனிவர்கள்
• வயிற்றில் - பூமாதேவி
• மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
• சடாத்களியில் - காருக பத்தியம்
• இதயத்தில் - ஆசுவனீயம்
• முகத்தில் - தட்சிணாக்கினி
• எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
• எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.
சுபமஸ்து!