ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!
Home




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...2012





கீழ் உள்ள படத்தை க்ளிக் செய்து தரிசனம் செய்க!








FEB- 12/02/2010 மகா சிவராத்திரி
சிவராத்திரியன்று தங்களை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுங்கள் திருஅண்ணாமலையாரே!












சிவராத்திரிவிரதம்



சிவராத்திரி ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

அன்று முழுவதும் ண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவனுக்கு செய்யப்படும் பிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடு‌‌த்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.

இரவில்சிவனுக்கு செய்யப்படும் பூஜைகள் குறித்த முழுவிவரமும் ங்கு தரப்பட்டுள்ளது. அதற்கேற்ற பொருட்களைநீங்கள் வாங்கி ளிக்கலாம்.

முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையும், உச்சிக்கால பூஜையையும் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது.

சிவ... சிவ.... ராத்திரி சிவராத்திரி





சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மகா பிரளயத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே மகா சிவராத்திரி என்று சைவ சமயம் கூறுகிறது. சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை

நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவராத்திரி பூஜை செய்ய வேண்டும்.

பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணப் பிரதமை முதல் தொடங்கி 13 நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு சதுர்த்தசியில் பூஜை செய்யவேண்டும்.

மாத சிவராத்திரி: மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில் முதலில் வரும் திருதியை, சித்திரை கிருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும், அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள், தை சுக்ல திருதியை இவை அனைத்தும் மாத சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரி: சோமவாரத்தன்று பகல், இரவு இரு பொழுதுகளிலும் அமாவாசையாக இருப்பின் அது யோக சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி:மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி புண்ணிய காலமாகும்.

அன்றைய தினம் இரவு கடைசி 14 நாழிகை (5 மணி 36 நிமிடங்கள்) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

சிவமகாபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த பாத்மம் முதலிய பத்து புராணங்கள், மற்றுத் வாதூலம் முதலிய ஆகமங்கள் ஆகியவற்றில் சிவராத்திரியின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.


சிவராத்திரியில் சிவனருள் பெற்ற வேடன்



வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடப் போனான். பகலில் விலங்கு ஒன்றும் கிடைக்காததால், இரவில்நிச்சயமாக வேட்டை ஆடலாம் என்று ஒரு மரத்தில்ஏறி அமர்ந்தான். இரவு தூங்காமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

இரவு கழிந்தது. சூரிய உதயம் ஆனது. பொழுது விடிந்ததும் மரத்திலிருந்து கீழே இறங்கினான். அவன் உறங்காமல் விழித்திருந்த நாள் மகா சிவராத்திரி. அவன் அமர்ந்திருந்த மரம் வில்வமரம். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட இடம் சிவலிங்கம் இருந்த இடம்.

அவனை அறியாமல் அவன் சிவபூஜை செய்தாலும், மறுபிறவியில் அவன் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சுகமாக வாழ்ந்தான்.

இது போன்று இன்னும் பல வேடன் திருக்கதைகள் சொல்லப்படுவதுண்டு.





சிவராத்திரி விரத பலன்கள்




* சிவராத்திரி மகிமையை திருநந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்கினி, குபேரன் முதலியவர்கள் அனுஷ்டித்து பல வரங்கள் பெற்றார்களாம்.


* விஷ்ணு இந்த விரதம் இருந்து சக்கராயுதத்தையும், லட்சுமியையும் பெற்றார்.


* பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்க வல்லது சிவராத்திரி விரதம்.


* சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன்கிடைக்கும்.


* சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் புத்தி, முக்தி ஆகியவை கிடைக்கும்.


சிவராத்திரி ஏற்பட்டதற்கான ஒரு கதை




ஒரு யுகம் முடிந்தபோது பிரளயம் உண்டாகி உலகம் அழிந்தது.

ஆதலால் சகல உயிரினங்களும் ஒடுங்கியிருந்தன. எங்கும் இருள்மயமாகக் காட்சி அளித்தது. எஞ்சியிருந்தவர்கள் சிவனும் உமையவளும் மட்டுமே. அப்போது,

உயிர்கள் உய்யும் பொருட்டு நான்கு யாமங்களிலும் பார்வதி தேவி, சிவபெருமானைப் பூசித்து வேண்டிக்கொண்டார். சிவபெருமான் பிரம்ம தேவருக்கு ஆணையிடவே சிருஷ்டி உருவாகத் தொடங்கியது.

உமையவள் சிவபெருமானிடம், இந்த இரவைச் சிவராத்திரியாக அங்கீகரியுங்கள்.

சிவராத்திரியன்று தங்களை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

ஒருசமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்?

என்று போட்டி ஏற்பட்ட போது ஆணவ இருள் தோன்றியது.

தேவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சிவன் ஜோதி வடிவமாக நின்றார். அப்போது தேவர்கள் சிவனைப் பூஜித்த காலமே சிவராத்திரி எனப்பட்டது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.

விஷத்தின் கொடுமை அவரைப் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு தேவர்கள் இரவு முழுவதும் சிவபெருமானைப் பூஜித்தார்கள்.

அந்த நாளே சிவராத்திரி என்று ஆயிற்று. ஒரு முறை சக்தி விளையாட்டாகச் சிவபெருமானின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் சர்வலோகங்களும் இருட்டில் மூழ்கின. அந்த நேரத்தில் தேவர்கள் ஒளி வேண்டி சிவபிரானை வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரியாக ஆயிற்று.


சிவராத்திரி புண்ணிய கதைகள்

கொடியவன் புனிதம் பெற்ற நன்னாள்



சுகுமாரன் என்ற கொடிய கொள்ளைக்காரனை அரசனின் காவலர்கள் பிடிக்க வந்தார்கள். சுகுமாரன் பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்தான்.

ஒரு நாள் இரவு. அங்குள்ள சிவாலயத்தில் இரவு முழுக்க சிவ வழிபாடுகள் நடைபெற்றன. அதை ஆவலலுடன் சுகுமாரன் கண்ணுற்றான். அந்த நாள் சிவராத்திரி ஆகும். கொடியவனான அவன் ஆயுள் முடியும் பொழுது கூட சிவ... சிவ... என்று சொல்லிக் கொண்டே உயிர் விட்டான். சிவராத்திரி அன்று பூஜையைக் கண்டதாலும் உயிர் போகும் தறுவாயில் சிவ... சிவ... என்று சொன்னதாலும்அவன் பேறுகள் பல பெற்று சிவனடி சேர்ந்தான்.


குணந்தியை குபேரனாக்கிய சிவராத்திரி



கலிங்க நாட்டை ஆட்சி செய்து வந்த குணந்தி என்ற மன்னன், சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக விளங்கச் செய்து வழிப்பட்டான். அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் குபேரனாகப் பிறந்தான். அவனை இறைவன் தனக்கு தோழனாக இருக்கும்படி அருளினார்.


விபரிசன் பெற்ற திருவருள்



விபரிசன் என்ற மன்னன் முன் பிறவிகளை அறியும் ஆற்றல் பெற்றவன். இந்தச் சக்தி தங்களுக்கு எப்படி வந்தது? என்று அவன் மனைவி குமுதவல்லி கேட்டாள். அதற்கு அவன். நான் முற்பிறவியில் ஒரு நாயாக இருந்தேன். அப்பொழுது ஒரு நாள் சிவன் கோவியில் இரவு முழுக்க வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நாள் சிவராத்திரி.

நான் ஒன்றும் அறியாமல் ஏதேச்சையாக அந்தக் கோயிலை பூஜை வேளையில்சுற்றி சுற்றி வந்தேன். அதுவே எனக்கு இப்பிறவியில் முற்பிறவிகளை அறியும் சக்தியும், அரசப் பதவி கிடைப்பதற்கும் காரணமானது என்று விளக்கினான்.

மஹா சிவராத்திரி



பன்னிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும் அருள் மஹா சிவராத்திரி-பாரில்
ஆறிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும். அருள் மஹா சிவராத்திரி,

பற்றியத் துயரிருகல பாருலகில் பரமசிவனின்-அருள்
நெற்றிக் கண்ணொளிக்கும் மஹா சிவராத்திரி-பாரில்
முற்றியப் பகைப் பினி. மனத் துயரகழ அருள் சிவனின்-அருள்
வெற்றித் திருச் சூழமொளிக்கும் அருள் மஹா சிவராத்திரி

தில்லையிலாடிய சிவ சம்போ சங்கரனின் அருள்-கைச்
சிற்றுடுக்கை ஒலித்து வரும் அருள் மஹா சிவராத்திரி-சிலாபம்
முன்னையிலாடிடும் முக்கண்ணன் மஹேஸ்வரன்.-பாரின்
முட்டறுக்கல் தீர்க்க வரும் அருள் மஹா சிவராத்திரி.

இமயமலை மீதினிலருள் ஈஸ்வரியாள் சக்தியுடன் இணைந்தாடிய-அருள்
ஈசன் இதயமிரங்கியருள வரும், இம் மஹா சிவராத்திரி-மாந்தர்
இதய நிலைக் கண்டு தேவி மஹா சக்தியன்னையுடன்-அருள்
ஈசன் அபயமளித்தருள்வான் இம் மஹா சிவராத்திரியில்


சிவன் ஜோதியாய் எழுந்த திருநாள்



பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற அகந்தை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்பொழுது சிவபெருமான் அவர்களின் ஆணவ இருளை நீக்க ஜோதி வடிவாய், லிங்கோத்பவராய் சுடர் விட்டார். அந்த ஜோதி வடிவைக் கண்டு பிரம்மனும் விஷ்ணுவும் வியப்படைந்தனர்.

அப்போது, இதன் முடிவையும் அடியையும்காண்பவர்களே பரம் பொருள் ஆவர் என்ற அசரீரி ஒலித்தது. விஷ்ணு பன்றியாகவும், பிரம்மன் அன்னமாகவும் மாறி அடி முடி காண முயன்று தோற்றனர்.

இப்படி சிவபெருமான் ஜோதியாய் காட்சியளித்த இரவு சிவராத்திரி ஆகும். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் திருவண்ணாமலை. இதை உணர்த்தும் பொருட்டே சிவராத்திரி இரவு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் 3 ஆம் கால பூஜையில் ஆலயத்தில் சிவச் சந்நிதி பின்புறம் இருக்கும்லிங்கோத் பவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.






நன்றி!







சுக்லாம் பரதரம் விஷ்ணும்!
சசிவர்ணம் சதுர்ப் புஜம்!
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்!
ஸர்வ விக்னோப சாந்தயே!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்!
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு!
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்!
தப்பாமல் சார்வார் தமக்கு!

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே !

பாடலைப் பாடி நம்முடைய கடமைகளைச் செய்யத் தொடங்குவோம்





திரு அண்ணாமலை ஜோதிடம் சார்பில்
குருப்பெயர்ச்சி மஹா பரிகார யாகம் & சஹஸ்ர யாகம்” இனிதே நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும்

நன்றி!நன்றி!




வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!